Skip to main content

Posts

Showing posts from October, 2013

தயிர்

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச ்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். பாலில் ளாக்டோ இருக்கிறது. தயிரில் இருப்பது ளாக்டொபஸில். இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள். பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை குறைக்கும் வாய்ப்பிருக்கிற து. ஆனால் தயிர் அப்படி அல்ல. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். பாலைதிரித்து உருவாக்கபடுவதுதான் பனீர். (பனீரைதனியாக எடுத்த பிறகு இருக்கும்) புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தர உணவுவகைகளை சாப்பிடும்பொழுத ு வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம். மெனோபாஸ் பருவத்தை எட்ட

கொய்யா

கொய்யா கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன. உணவு ஜீரணமாவதற்கும் நல்லது. இரவு உணவுக்குப் பின் நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங்களை சாப்பிட்டால் மலச்சிக்கலே இருக்காது. பல்முளைக்கும் குழந்தைகளுக்கு கொய்யாப் பழங்களை தினமும் கொடுத்தால் பற்கள், ஈறுகள் உறுதியாகும். கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை,களில் மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றது. கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கொய்யா இலைகள் மூலம் த

இளநீர்

இளநீர் இயற்கை பானமாக அழைக்கப்படும் இளநீரை அப்படியே சாப்பிடலாம். வெயில் காலங்களில் அனைவராலும் பருகப்படுவது. முழுமையான இயற்கை பானம் என்றே இளநீரைக் குறிப்பிடலாம். இளநீரானது 200 மில்லி முதல் ஒரு லிட்டர் வரை, இளநீரின் வடிவம், அளவிற்கேற்ப நீரைக் கொண்டிருக்கும். சர்க்கரை, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நொதிகள் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் பெட்டகமே இளநீர் என்று சொல்லலாம். புத்துணர்ச்சி பானமாக இளநீரை அருந்தலாம். இயற்கை வழங்கிய கோடையின் கொடையே இளநீர். உடலின் உஷ்ணம் தணித்து குளிர்ச்சியூட்டும். இளநீரில் ஒற்றைச்சர்க்கரை, எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுஉப்புக்கள் மிகுந்துள்ளது. சைடோகின்கள் எனும் தாவர ஹார்மோன்கள் இளநீரில் நிரம்பி உள்ளது. இது வயது மூப்பு, ரத்தக்கட்டு ஆகியவற்றுக்கு எதிராக செயல்படும். புற்றுநோய் எதிர்ப்புத் தன்மையும் வழங்கும். இளநீரிலுள்ள அமினோ அமிலங்கள், நொதிகள், தாதுஉப்புகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உடல் திரவ இழப்பை உடனே ஈடுகட்டும். அத்துடன் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும்போது உடலில் ஏற்

நுங்கு

நுங்கு கோடை வெயில் கொளுத்திட்டிருக்கு. வெயிலோட தாக்கத்தில இருந்து தப்பிக்க குளிர்பானங்கள், பழங்கள், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை சாப்பிட்டு வர்ற இந்த நேரத்துல இயற்கையோட கொடையான நுங்கு சீசனும் தொடங்கியிருக்கு. நாம விரும்பி சாப்பிடற இந்த நுங்குல ஏராளமான நன்மைகள் இருக்கு. உடலுக்கு குளிர்ச்சிய தர்றதுல முக்கிய பங்கு வகிக்கிது நுங்கு. அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றத

முருங்கைக்காய்

முருங்கைக்காய் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் முருங்கைக்காயில் எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. ஆனால் நாம் அறிந்திருப்பதோ சில பயன்களை மட்டுமே. பயன்களை அறிந்து காய்கறிகளை சாப்பிடுவோமே பகுதியில் இன்று நாம் பார்க்க விருப்பது முருங்கைகாய். முருங்கைகாய். என்ன சத்துகள் இருக்கு: தினமும் முருங்கைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள். பொதுவாக முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்.. மேலும் புரதம் 2.5 கிராம், கார்போஹைட்ரேட் 3.7 கிராம்,தண்ணீர் 86.9%, கலோரி 26,ஃபைபர் 4.8 கிராம்,கொழுப்பு 0.1 கிராம்,விட்டமின் ஏ 0.11 மிகி,வைட்டமின் பி (கோலைன்) 423 மி.கி,வைட்டமின் பி 1 (தயாமின்) 0.05 மி.கி, விட்டமின் பி2 (ரிபோப்லாவின்) 0.07 மி.கி,வைட்டமின் பி3 (நிகோடினிக் அமிலம்) 0.2 மிகி,கால்சியம் 30 மில்லி கிராம்,மெக்னீசியம் 24 மில்லி கிராம் கொண்டுள்ளது. யாருக்கு நல்லது : குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும், மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயா

காட்டுச்சுரை

காட்டுச்சுரை இதனை பேய்ச்சுரை அல்லது காட்டுசுரை எனவும் அழைப்பர். காட்டுச்சுரை (அ) பேய்ச்சுரை கசப்பாக இருக்கும். மருத்துவத்துக்கு இவற்றின் இலை, கொடி, காய், விதை என அனைத்தும் பயன்படுகிறது. இந்த பேய்ய்சுரையின் மருத்துவக் குணங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம். எவ்வளவு கடுமையான விஷக்கடியாக இருந்தாலும் இது விஷத்தை முறித்து துரித குணத்தை உண்டாக்கிவிடும். பேய்ச்சுரையின் வேரைச் சேகரித்து நன்கு அரைக்க வேண்டும். இதை விஷத் தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். இந்த இலையை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டிவிட வேண்டும். திடீரென ஏற்படும் பேதி, வாந்தி முதலியவற்றால் விஷத்துக்கு முறிவு ஏற்பட்டு விஷக்கடிக்கு ஆளானவரின் உயிர் மீளும். சிலவகைப் பாம்புகள் கடித்தால் அவற்றின் விஷ வேகம் மிகவும் துரிதமாக இரத்தத்தில் கலந்து, இருதயத்தை அடைந்து முச்சடைத்து மனிதன் இறந்துவிடுவான் , ஆனால் அவசர உணர்வோடு பேய்ச்சுரையை உபயோகித்தால் விஷத்தை முறித்துவிடலாம். கொடிய விஷப்பாம்பு கடித்து மனிதன் உணர்விழந்துவிட்டான் என்றால் முதலில் நாம் செய்யவேண

செம்பருத்தி

செம்பருத்தி செம்பருத்தியின் பூக்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் சிறந்ததாகும். இப்பூக்களின் தேநீர் அல்லது ஜூஸ் பருகுவதன் மூலம் இரத்த அழுத்தம் குறைகிறது.. ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் கொண்டுள்ளதால் உடலில் உள்ள செல் சேதத்தை எதிர்த்து போராடுகிறது. இது இருமல், முடி உதிர்தல் போன்ற சிகிச்சைக்கு உதவி புரிகிறது மேலும் முடி அதிகமாக வேண்டும் என விரும்புபவர்கள் செம்பருத்தியின் எண்ணெய், ஷாம்பு, கண்டிஷனர் போன்று உபயோகப்படுத்தலாம். ஆரோக்கியமான உடலுக்கு தேவையான வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது-. இப்பூக்களில் வைட்டமின் சி மற்றும் தாதுக்கள் கொண்டுள்ளது. இதயம் மற்றும் நரம்பு மண்டலத்துக்கு தேவையான சுகாதார நலன்களை வழங்குகிறது. எடை கட்டுபடுத்தும் செயல்களை மேற்கொள்கிறது-. நினைவாற்றலை மேம்படுத்தும், செரிமான பிரச்சனைக்கு தீர்வாகவும் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஒரு கப் செம்பருத்தி பூவின் தேநீர் கொழுப்பை குறைக்கிறது. செம்பருத்திப் பூ இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அ

உலர் திராட்சை

உலர் திராட்சை : திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் என்கிறோம். உலர் திராட்சையில் வைட்டமின் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. மேலும் சுக்ரோஸ், பரக்டோஸ், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12 அமினோ அமிலம் இரும்புச்சத்து பொட்டாசியம், கால்சியம் போன்ற அனைத்து சத்துகளும் இதில் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை சிறந்ததாகும். இதில் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால் எலும்புகள் உறுதிபெறவும் பற்கள் வலுபெறவும் உடல் வளர்ச்சி பெறவும் இது உதவுகிறது. குழந்தைகளுக்கு தேகபுஷ்டி வேண்டுமென்றால் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பாலில் போட்டு காய்ச்சி அருந்தச்செய்யுங்கள். இவ்வாறு பருகுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடும் முதியோர்களுக்கு சிறந்தது. உல் திராட்சை தாமிர சத்து கொண்டுள்ளதால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கிளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இந்த பலத்தை வாயில் போட்டு சாப்பிடும் போது எலும்பு மஞ்ஜைகள்

கற்றாழை

கற்றாழை உஷ்ண வாயு தொடர்பான பிணிகளை மிகவும் துரிதமாகவும், பூரணமாகவும் இது குணப்படுத்தும் கற்றாழை எங்கும் காணக் கிடைக்க கூடியது கற்றாழை. கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள சோறு போன்ற கலவையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும். வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும். ந