Skip to main content

Posts

Showing posts from September, 2013

சிறியா நங்கை

சிறியா நங்கையின் மருத்துவ பயன்கள் :சிறியாநங் கைத்தழையைச் சேவித்த பேரைப்பிரியார் மடந்தையர்கள் பின்னும் அறியதில்டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்திங்கள் முக மாதே தெளி- மூலிகை குணபாடம்..இதன் இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும், இவர்களைப் பெண்கள் இச்சை கொள்வர்.இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை, மாலை இரு வேளையும்2 -முதல் 4 - கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும்,அழகு பெரும்.பாம்பு கடிக்கு இதன் இலையைக் கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுத்து வர கடி நஞ்சு நீங்கும் .வெண்காரத்தை இதன் இலைச் சாற்றில் அரைத்து புடமிட நீறும் .(பற்பமாகும்)சர்க்கரை நோய்க்கு அனுபவ முறை :சிரியா நங்கை இலைப் பொடி - நெல்லி முள்ளிப் பொடி - நாவல்கொட்டைப் பொடி - வெந்தயப் பொடி - சிறு குறிஞ்சான் இலைப் பொடி இவை ஐந்து வகைகளையும் ஒரே எடை அளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை காலை - மாலை ஒருடீஸ்பூன் அளவு எடுத்து ஒரு தம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர சர்க்கரை நோய் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும்.

கடுக்காய்

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகு "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவை