Skip to main content

Posts

Showing posts from July, 2013

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு

மகிழ்ச்சி தரும் மகிழம்பூ

பழமை வாய்ந்த அம்மன் கோவில்களிலும், சிவன் கோவில்களிலும் மற்றும் இதன் அருமை தெரிந்தவர்கள் வீட்டிலும் வளர்க்கப்படும் சிறப்புப் பெற்ற மரம் மகிழம்பூ மரம். அவ்வளவு ஏன், இந்தத் தொடரைப் படித்து இதன் அருமை தெரிந்தவுடன் நீங்களே உங்கள் வீட்டில் வைத்து வளர்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். இந்தமரம் பொதுவாக காண்பதற்கரிதாகவே இருக்கிறது. கண்டிப்பாக வளர்த்து பயன் பெறவேண்டிய மரம்.மனதுக்கு இதமான மணம்வீசும் மலர்களில் மகிழம்பூ மிகச்சிறந்தது. மகிழ் என்றால் “மகிழ்ச்சியாக இரு” என்று பொருள். இந்தமல்ர் இன்பத்தையும்மகிழ்ச்சியையும் தருவதால் சித்தர்கள் இதனை மகிழம்பூ என்றழைத்திருக்கிறார்கள்.கைப்பிடி மகிழம்பூவை 2 கோப்பை தண்ணீரில் கொதிக்கவைத்து, சரிபாதியாகச் சுருக்கி வடித்து,காலை மாலை நேரங்களில் குடித்து வந்தால் உடலில் சூடு தணிந்து வலிமை பெற்று விளங்கும். மூன்று கைப்பிடிப் பூவை இதேபோல் வைத்துவடித்து, பால் சர்க்கரை சேர்த்து இரவு உணவுக்குப்பின் ஆண்கள் பருகினால் இல்லற இன்பம் கூடும். நல்ல திறனுண்டாகி உடலுறவுக்குப்பின் ஆயாசமும் களைப்பும் வராமல் தடுக்கும். பித்தம் சமன்படும்.பூக்களை உலர்த்தி மெல்லிய பொடியாக்கி மூக்கில் பொடிபோடுவத

சம்பங்கி

மணமிக்க மலர்களை அணிந்துகொள்வதால் உடல் உற்சாகமும் மனமகிழ்ச்சியும் அடைவதென்பது நெடுங்காலமாக அறிந்த உண்மை. சோதிடமுறையில் கூட கிரகங்களால் ஏற்படும் தீமைகள் கூட குறிப்பிட்ட மலர்களை அணிவதால் குறையும் என்று கூறப்படுகிறது. பெண்களுக்குப் பிரியமான பூக்களில் சம்பங்கி எனப்படும் சண்பகப்பூவும் ஒன்று. இந்தப்பூ மரத்தில் பூப்பதாகும். வீடுகளிலும் தோட்டங்களிலும் ஆலயங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது.ஆந்திர நாட்டில் பரவலாகவும், சிம்மாசலம் என்ற இடத்தில் அதிகளவிலும் இயற்கையாகவே வளர்ந்துள்ள இம்மரத்தின் அனைத்து பகுதிகளும் மிகச்சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டது.வாதபித்த மஸ்திசுரமாமேகஞ் சுத்தசுரம்தாது நஷ்டக் கண்ணழற்சிதங்காவே மாதேகேள்தின்புறு மனக்களிப்பாந்திவ்யமண முட்டிணஞ்சேர்சண்பகப் பூவதற்குத்தான்வாதசுரம், பித்த சுரம், எலும்பு (அஸ்த) சுரம், கிருமித் தொற்றுதலால் ஏற்படும் சுத்தசுரம், மேகநோய்கள், ஆண்களின் தாது நட்டம், கண்ணழற்சி போன்றவை சண்பகப்பூவால் தீரும் என்கிறது அகத்தியர் குணவாகடம்.150 கிராம் அளவு பூக்களை 200 மில்லி லிட்டர் அளவு தண்ணீரில் கொதிக்கவைத்து 50 மில்லி லிட்டர் அளவு சுருக்கி வடித்து காலை – மாலை அரு

அருகம் புல்லின் அவசியம்

புல்லாகிப் பூடாகிப் புழுவாகி மரமாகிப் பல்விருகமாகி என்று புவியின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைத் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறியிருக்கிறார். திருவள்ளுவப் பெருமானும் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்று முதலில் தோன்றியது அகரம் என்றே கூறியிருக்கிறார். முதலில் ஒருசெல் தாவரமாகத் தோன்றி வளர்ந்த அகரம்புல் தற்போது அருகன் புல் என்று மருவிவிட்டது.முதலில் தோன்றியதால் அதிகத் திறன்மிக்கதாகவும், மற்ற பொருட்களைக் கெடாமல் பாதுகாக்கும் திறனுடையதாகவும் உள்ளது இந்த அகரம்புல். மாட்டுச்சாணத்தில் இரண்டாவது நாளே கிருமிகள் மற்றும் பூச்சிகள் உண்டாகும். ஆனால் நம் பெண்கள் மார்கழி மாதத்தின் காலைநேரங்களில் கோலம்போட்டு சாணத்தால் பிள்ளையார் பிடித்து ஒரு அகரம்புல் குத்திவைத்தால் கெடாமல் எத்தனை நாளாயினும் அப்படியே உலர்ந்து போகிறது.அனல்வீசும் கோடையிலும் இப்புல்மேல் பட்டுவரும் காற்று குளிர்ந்துவிடும். ஒருமுறை தோன்றி வளர ஆரம்பித்தால் அப்பகுதி முழுவதும் ஆழமாகவும், அகலமாகவும் பரவி நிலைத்துவிடும். எத்தனை ஆண்டுகள் நீர் கிடைக்காமல் வற்றினாலும் அழிந்துபோவதில்லை. மீண்டும் நீர்பட்டுவிட்டால் செழிக்க ஆரம்பித்துவிடு

துளசி

நம் நாட்டில் எங்கும் வளரும் இந்தச் செடியினம், Ocimum Sanctum என்ற தாவரவியல் பெயரால்அழைக்கப் படுகிறது. துளசியில் 22 வகைகள் உள்ளன. நாம் பொதுவாகக்காண்பது நல்துளசி, நாய்த்துளசி, கருந்துளசி, எலுமிச்சந் துளசி, கற்பூரத் துளசி ஆகியவைதான்.துளசி பயிரிடும் இடத்தில் மண்ணும், காற்றும், நீரும் தூய்மையடைகிறது. காற்றால் பரவக்கூடிய இன்புளூயன்சா, ப்ளூ, போன்ற நச்சுக்காய்ச்சல்கள் அண்டாது. இதன் வாசம் நுண்கிருமிகளைக் கொல்கிறது. தொற்று நோயுள்ளவர்களைப் பார்க்கப் போகும்போது பையில்/ கைக்குட்டையில் கொஞ்சம் துளசியிலைகளை வைத்துக் கொண்டு முகர்ந்துகொண்டிருந்தால் கிருமிகள் நமக்குப் பரவ வாய்ப்பில்லை.ஐயம் வயிறுளைச்ச லஸ்திசுரந் தாகமும்போம்பைய சுரமாந்தம் பறக்குங்காண் – மெய்யாகவாயின ரோசகம்போம் வன்காரஞ் சூடுள்ளதூய துளசிதனைச் சொல்!என்று அகத்தியர் குணவாகடத்தில் உள்ளது. கார்ப்பும், வெப்பமும் உள்ள தூய துளசியால் கபநோய்கள், பலவகைக் காய்ச்சல் நோய்கள், எலும்புக் காய்ச்சல், அதிக நீர்வேட்கை, வயிறுளைதல், நாவில் சுவையின்மை நீங்கும்.வைணவக் கோயில்களில் இறைவனுக்குத் துளசியினால் அர்ச்சனை செய்து தாமிரப் பாத்திரத்திலுள்ள தூய நீரில் துளசியில

நீண்ட வாழ்வளிக்கும் கரிசலங்கன்னி

சித்த மருத்துவத்தை ஓர் உயிருள்ள மருத்துவம் என்று கூறமுடியும். பெரும்பாலும் அரியமூலிகைகளின் உதவியுடனே சித்த மருத்துவ மருந்துகள் ஆக்கப்படுகின்றன. மனிதர்களில் ஞானிகள் எப்படி பிறரின் மனக்குறைகளை நீக்க உதவுகிறார்களோ அதுபோலவே தாவரங்கள் வகை உயிரினங்கள் பிற உயிரிகளின் உடற்கோளாறுகளை நீக்க உதவுகின்றன.நம் நாடு எப்படி சித்தர்களுக்கும், ஞானிகளுக்கும் பெயர்பெற்று விளங்குகிறதோ அதுபோலவே, பல அரிய மூலிகைகளுக்கும் பெயர்பெற்று விளங்குகிறது. அதனால்தான் சித்தர்களுக்கும் மூலிகைகளுக்கும் அவ்வளவு இணக்கமான உறவுள்ளது. அத்தகைய வியத்தகு மூலிகைகளைப் பற்றித்தான் பனித்துளிகள் தளத்தில் இந்த நெடுந்தொடர் வெளிவருகிறது. பிருங்கராஜா என்றும் தேகராஜா என்றும் வடமொழிச்சொற்களால் சித்தர்கள் கரிசலாங்கண்ணியை அழைத்தார்கள். உண்மையில் இது மூலிகைகளின் மன்னன் தான். இது கரிசாலை என்றும் அழைக்கப்படுவதுண்டு.அண்மையில் நமது தமிழ்மண்ணில் உதித்த அருட்பிரகாச வள்ளல் பெருமான், முதல் நிலையில் வைத்துப் பாராட்டியுள்ள ஒரு மிகச்சிறப்பான மூலிகைதான் கரிசாலை.கரிசாலையைப் பச்சையாகவோ அல்லது சமைத்தோ நாள்தோறும் உட்கொள்பவர்களது உடல் நலம்மிகுந்து வாழ்நாட்களை நீ

சீரகம்

Pimpinel Anisum என்ற தாவரவியல் பெயர்கொண்ட சோம்பு எனும் பெருஞ்சீரகம் நடுத்தரைக்கடல் பகுதியில் முதலில் தோன்றியது. பல்கேரியா, சைரேசு, பிரான்சு, செருமனி, இத்தாலி, மெக்சிகோ, தென் அமெரிக்கா, சிரியா, துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.இந்தியாவில் இராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் சிறு அளவில் பயிரிடப்படுகிறது. நம் நாட்டின் தேவைகளுக்கு அதிகமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிசெய்யப்படுகிறது.இதிலுள்ள சத்துக்கள் பின்வரும் அட்டவணையில் சொல்லப்படுகின்றன,சத்துக்கள்விழுக்காடுபுரதம்18சத்து எண்ணை2.7கொழுப்பு எண்ணை8 முதல் 23சர்க்கரை வகை3.5மாவுச்சத்து5நார்ச்சத்து12 முதல் 25சாம்பல்சத்து6 முதல் 10குளோரின்சிறிதளவுஇது சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் உணவிலும் பெரிதும் பயன்படுகிறது. மேலும் அடுமனைகளில் (Bakery) செய்யப்படும் உணவுப்பொருட்கள், இனிப்புவகைகள், குளியல் கட்டிகள் (Soap), பல்பொடி, மதுவகைகள் ஆகியவற்றில் வாசனைக்கூட்டுப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கான கிரைப் வாட்டரில் சோம்பு முக்கியப்பொருள்.5 அடி உயரம் வரை வளரக்கூடிய இதன்செடி மஞ்சள் நிறப்பூ

கவலை தீர்க்கும் கடுக்காய்

துவர்ப்புச் சுவை அதிகமாகவும், இனிப்பு, புளிப்பு, கார்ப்பு மற்றும் கசப்பு சுவைகள் குறைவாகவும் இயற்கையாகவே ஐம்பெரும் பூதங்களின் ஒருங்கிணைப்பாய்க் காணப்படும் கடுக்க்காயானது வாத, பித்த மற்றும் கப மாறுதல்களினால் ஏற்படும் அனைத்து நோய்களையும் தீர்க்கும்.Terminalia Chebula என்பது கடுக்காயின் தாவரவியல் பெயர். அகத்திய முனிவர் இதனைத் தாயினும் மேலானதாகப் புகழ்ந்து பாடியிருக்கிறார்.கடுக்காயும் தாயும்கருதிலொன்றென்றாலும்கடுக்காயைத் தாய்க்கதிகங்காண்நீ – கடுக்காய்நோய்ஓட்டி உடற்தேற்றும்உற்ற வன்னையோ சுவைகள்ஊட்டி உடற்தேற்று முவந்துவடமொழி நூல்கள் பலவற்றில் கடுக்காயின் இன்றியமைமாக்காக தேவேந்திரன் அமுதத்தை அருந்தும்போது ஒருதுளி புவியில் சிந்தி அது கடுக்காய்மரமாக வளர்ந்ததாகவும், பதினான்கு வகை இரத்தினங்களில் கடுக்காயும் ஒன்றாகக் கருதப்படுவதாவும் கூறப்பட்டுள்ளது.புவியிலுள்ள அனைத்திலும் நல்லது கெட்டது இரண்டும் கலந்தேஇருப்பதுபோல் கடுக்காயிலும் நச்சு உள்ளது. எப்படி சுக்கு, இஞ்சி ஆகியவற்றின் தோலைநீக்கிவிட்டு உட்புறத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டுமோ அதுபோல கடுக்காயின் உற்புறமுள்ள கொட்டைப்பகுதியை நீக்கிவிட்டு அதன் தோலை

நலம் தரும் மஞ்சள்

மஞ்சள் நமது இந்திய மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. இதன் தாவரவியல் பெயர் Curcumalongaஎன்பதாகும். இதன் பண்புகளை நமது முன்னோர்கள் நன்கு ஆராய்ந்தறிந்து இறைவழிபாட்டிலும், நோய்தீர்க்கும் மருந்துகளிலும், அழகூட்டும்பொருட்களிலும் பயன்படுத்தும் பல முறைகளைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்.எந்த நற்செயலைத் தொடங்குவதற்கு முன்னரும் முழுமுதற்கடவுளாக மஞ்சளை ஒரு பிடி நீரைத் தெளித்து பிடித்து வைத்து அகரம்புல் சொருகி அதை இறைவனாக எண்ணி வழிபடுபடுவது நாம் அறிந்ததே. மங்கலச் சின்னமான குங்குமம் மஞ்சளில்தான் உருவாக்கப்படுகிறது. நற்காரியங்கள், விழாக்கால உணவுக்கான மளிகைப் பொருட்களின் பட்டியலில் மஞ்சள் எழுதியபின்தான் மற்ற பொருட்களை எழுதுவார்கள். மஞ்சள் ஒரு நுண்ணுயிர்க்கொல்லி, நச்சு எதிர்ப்புப்பொருள் என்பதால்தான் அது வழிபாட்டிலிருந்து எல்லா இடம், காலச் சூழ்நிலைகளிலும் நமது முன்னோர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.உடலைப் பொற்சாயலாக்கி கெட்ட நாற்றத்தைப் போக்குகிற மஞ்சளினால் ஆண் வசப்படுத்தலும்,பசியும் அதிகமாகும். வாந்தி, பித்த, வாத கோபங்கள், தலைவலி, சளி, நாசிரோகம், பிரமேகம், வலி, வீக்கம், வண்டுகடி நச்சு, பெருவிரணம

சுக்கு

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. முறைப்படி உலரவைத்த இஞ்சிதான் சுக்கு. இந்தியாவின் ஐந்து இன்றியமையாத நறுமணப் பொருட்களில் ஒன்று. Gingiber Officnallinn எனும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த மூலிகை இந்தியமக்களின் அன்றாட உணவிலும் மருத்துவத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது.புவியில் உற்பத்தியாகும் அளவில் 50 விழுக்காடு இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது. அதில் கேரளாவில் 70 விழுக்காடு விளைகிறது. அதிலும் கொச்சியில் விளையும் வகைதான் புவியிலேயே சிறந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஐம்பது நாடுகளிக்கு சராசரியாக 7 ஆயிரம்டன் அளவுவரை சுக்கு ஏற்றுமதியாகியுள்ளது.தொன்மைக்கால கிரேக்கர்களும், ரோமாபுரி மக்களும் இதை விரும்பிசெங்கடல் வழியாக அரேபிய வணிகர்களிடமிருந்து வரப்பெற்றார்கள். செம்மண் சேர்ந்த வண்டல்மண் அல்லது இரும்பகக் களிமண் சேர்ந்த வண்டல் மண்ணில் இது செழிப்பாக வளரும். இதில் அடங்கியுள்ள சத்துக்க்கள் பின்வருமாறு,புரதம்8.6கொழுப்பு6.4கால்சியம்0.1பாஸ்பரஸ்0.15இரும்பு0.011சோடியம்0.03பொட்டாசியம்1.4கலோரி மதிப்பு 100 கிராம் அளவில் 300 கலோரி அள

வேம்பின் சக்தி

மாரியம்மன் கோவில்களில் தெய்வ வழிபாட்டுக்குகந்ததாகவும் தெய்வீகத் திறன் பொருந்தியதாகக் கருதப்படும் வேம்பு சக்தியின் உருவமாக வணங்கப்படுகிறது. சிவன் உருவமாகக் கருதப்படும் அரசமரத்துடன் இணைத்து வளர்த்து அன்னை தந்தையாக இரு மரங்களுக்கடியிலும் வீற்றிருக்கும் வினாயகப்பெருமானை 9 முறை வலம்வந்து வணங்கினால் குழந்தைபேறு உண்டாகும் என்பது நம்பிக்கை.வேப்பமரமும் அரசமரமும் ஒன்றுசேர்ந்து காற்றைத் தூய்மையாக்கி பல நோய்களையும், மனக்கோளாறுகளையும் நீக்கி நலம்தரும் திறன்பெற்றிருக்கின்றன. தமிழ் மற்றும் தெலுங்குப் புத்தாண்டு தினத்தன்று மக்கள் அதிகாலையில் முதன்முதலில் உண்ணுவது வேப்பம்பூ பஞ்சாமிர்தமாகும். பித்தத்தைக் கட்டுப்படுத்தும் வேம்புக்கு நம் முன்னோர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். பாண்டியமன்னர்கள் வேப்பம்பூ மாலை அணிவது அவர்களின் மரபாகக் கருதப்பட்டுவந்தது. கசப்பான எந்தப்பொருளும் பித்தத்தை விருத்திசெய்யும் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால், வேம்பின் கசப்புமட்டும் பித்தத்தைச் சாந்தப்படுத்தும் தனிச்சிறப்பு பெற்றுள்ளது.சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் அறிவியலாளர்கள் பல்வேறு மரங்களைக் குறி

பித்தம் தீர்க்கும் வில்வம்

சிவாலயங்களிலும் மற்ற ஆலயங்களிலும் சிறப்பாக வளர்க்கப்படும் தெய்வீக மூலிகையான வில்வமரத்தின் அனைத்துப்பாகங்களும் மருத்துவத்துக்குப் பயன்படுகிறது. உக்கிரமான சிவனைக்குளிர்விக்க வில்வ இலைகளால் அர்ச்சிப்பதாக நம்பிக்கை நம்மிடத்திலுண்டு. இந்த இலைகளை பிரசாதமாகவும் உண்டு நோய்களையும் ஆன்மீகம் சார்ந்த மருத்துவ முறைகளையும் மேற்கொள்ள நம் முன்னோர்கள் ஏற்படுத்திவைத்திருக்கும் உண்மைதான் இந்த வழிபாட்டு முறைகளெல்லாம். நாற்பட்ட அதிக சூட்டினாலும், தீய பழக்கங்களினாலும் ஏற்பட்ட மேக நோய்கள் என்னும் ஏழு உடல் தாதுக்களையும் நலிவடையச்செய்யும் முற்றிய நோய்களையும் வில்வ இலை தீர்த்துவைக்கும் என்பது உண்மை. இது எய்ட்ஸ் நோய்க்கிருமிகளையும் அழிப்பதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். காலை வெறும் வயிற்றில் 5 வில்வ இலைத்துளிர்களை மென்று உண்டு பின் பசும்பால் குடித்து வந்தால் ஓராண்டில் மேக நோய்கள், கை கால் பிடிப்பு, வாய்ப்புண் வயிற்றுப்புண், பெண்களின் வெள்ளைப்போக்கு, அதிகமான உதிரப்போக்கு நீங்கி நலமடையும். உடல் சூடு தணிந்து உதிரம் தூய்மையடையும். 5 இலைகளுடன் 3 மிளகுகளைச் சேர்த்து மென்று சாப்பிட்டுவந்தால் காச நோய் மற்றும் ஆஸ்துமா க

இதயம் காக்கும் மிளகு

பத்து மிளகைப் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது யாவரும் அறிந்த பழமொழி. உணவிலுள்ள நச்சு, சிறு உயிரினங்களின் நச்சு, இரச பாசாணம் மற்றும் ஈடு மருந்துகளின் நச்சுத்தன்மை போன்ற எல்லா விதமான நச்சுக்களை நீக்கி உயிர்காக்கும் உன்னத மூலிகையான மிளகு நறுமணப் பொருட்களின் மன்னன் என்றழைக்கப்படுகிறது. மிளகின் தாவரவியல் பெயர் Piper Nigrum. இது வெப்பமும் ஈரமும் கலந்த தட்பவெப்ப நிலமான கேரளாவில் இந்திய மொத்த விளைச்சலில் 96 விழுக்காடு விளைகிறது. 3.5 விழுக்காடு கர்நாடகாவில் விளைகிறது மீதம் உள்ளது தமிழகம் மற்றும் புதுவையில் விளைகிறது. 1947 ம் ஆண்டு கணக்கின் படி மொத்த நறுமணப்பொருட்களின் ஏற்றுமதி வருவாய் 54.86 கோடி அதில் மிளகுமட்டும் 29.53 கோடிக்கு ஏற்றுமதியாகியிருக்கிறது. இதிலிருந்து பைப்ரின் என்ற ஆல்கலாய்டு பிரித்தெடுக்கப்பட்டு நோய் நீக்கும் மருந்துகள், பூச்சிகொல்லி மருந்துகள் மற்றும் பிராந்தி எனும் மதுவகைக்கு உறைப்புத்தரவும் பயன்படுத்தப்படுகிறது. எகிப்தியர்கள் சவங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தினார்கள். ஆசியர்கள் இதனை ஆண்மைபெறும் மருந்தாகப் பயன்படுத்தினார்கள். இறைச்சி போன்ற அழுகும் பதார்த்தங்களைப் பராமரிக்க மி