பழமை வாய்ந்த அம்மன் கோவில்களிலும், சிவன் கோவில்களிலும் மற்றும் இதன் அருமை தெரிந்தவர்கள் வீட்டிலும் வளர்க்கப்படும் சிறப்புப் பெற்ற மரம் மகிழம்பூ மரம். அவ்வளவு ஏன், இந்தத் தொடரைப் படித்து இதன் அருமை தெரிந்தவுடன் நீங்களே உங்கள் வீட்டில் வைத்து வளர்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். இந்தமரம் பொதுவாக காண்பதற்கரிதாகவே இருக்கிறது. கண்டிப்பாக வளர்த்து பயன் பெறவேண்டிய மரம்.மனதுக்கு இதமான மணம்வீசும் மலர்களில் மகிழம்பூ மிகச்சிறந்தது. மகிழ் என்றால் “மகிழ்ச்சியாக இரு” என்று பொருள். இந்தமல்ர் இன்பத்தையும்மகிழ்ச்சியையும் தருவதால் சித்தர்கள் இதனை மகிழம்பூ என்றழைத்திருக்கிறார்கள்.கைப்பிடி மகிழம்பூவை 2 கோப்பை தண்ணீரில் கொதிக்கவைத்து, சரிபாதியாகச் சுருக்கி வடித்து,காலை மாலை நேரங்களில் குடித்து வந்தால் உடலில் சூடு தணிந்து வலிமை பெற்று விளங்கும். மூன்று கைப்பிடிப் பூவை இதேபோல் வைத்துவடித்து, பால் சர்க்கரை சேர்த்து இரவு உணவுக்குப்பின் ஆண்கள் பருகினால் இல்லற இன்பம் கூடும். நல்ல திறனுண்டாகி உடலுறவுக்குப்பின் ஆயாசமும் களைப்பும் வராமல் தடுக்கும். பித்தம் சமன்படும்.பூக்களை உலர்த்தி மெல்லிய பொடியாக்கி மூக்கில் பொடிபோடுவதுபோல் உறிஞ்சுவதால், மூக்கில் நிறைய நீர்வடிந்து நாற்றமடிக்கும் மண்டைப்பீனிசம்(Sinusitis), அது தொடர்பான தலைவலி மற்றும் வாயில் சுவையின்மை போன்றவை நீங்கி குணமாகும்.இதன் விதைப்பருப்பைச் சேகரித்துப் பொடியாக்கி வேளைக்கு 3 கிராம் அளவு காலை மற்றும் மாலை நேரங்களில் பாலுடன் அருந்திவர தாது வளர்ச்சிபெறும். உடல் சூடு, நச்சு, மலச்சிக்கல் நீங்கும். ஒரு தேக்கரண்டி விதைப்பொடியை நெய்கலந்து காலை மற்றும் இரவு உணவுக்கு முன் கொடுத்தால் குடல்திறனிழந்து மலச்சிக்கலால் அவதிப்படும் வயதானவர்களின் தொல்லை நீங்கும். குடல் வலிமை பெறும். தேவைப்பட்டால் இரண்டு தேக்கரண்டிவரை சாப்பிடலாம். விதைகளை வெந்நீர் விட்டரைத்து நெல்லிக்காயளவு சாப்பிடுவதால் பாம்புக்கடி நச்சு முறியும்.நாள்தோறும் காலை பல்துலக்கியதும் இளம் மகிழங்காய்களை மென்று சிறிது நேரம் கழித்து துப்பினால் பற்கள் இறுகி உறுதிப்படும். இதன் இலைகளைக் கசாயம் வைத்துப் பல்துலக்கியதும் வாய் கொப்பளித்துவந்தால் பல்நோய்கள்தீரும். இந்த மரப் பட்டையைக் கசாயம் வைத்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் ஆறும். பற்கள் வலிமை பெறும். ஏ.வி.எம் முலிகை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிமையம் தயாரிக்கும் வசீகரா பற்பொடியில் இது சேர்க்கப்பட்டுள்ளது.6 கிராம் அளவு பட்டையைச் சிதைத்து 250 மில்லி லிட்டர் அளவு தண்ணீரில் கொதிக்கவைத்து 50 மில்லி லிட்டர் அளவு சுருக்கி வடிகட்டி தேன் 1 தேக்கரண்டி கலந்து காலை மற்றும்மாலை நேரங்களில் குடிப்பதால் பெண்களின் உடல் வலிமைக்குறைவு மற்றும் கருப்பை வலிமைக்குறைவு நீங்கிக் குழந்தைப் பேறு உண்டாகும்.சித்த மருத்துவர்கள் வெள்ளியைச் சாம்பலாக்க (பஸ்பம்) இதன் பூப்புக்கும் காலத்தில் சேர்த்து மருந்து முடிப்பார்கள்.தாதுவைநன் மெய்யழகைச்சக்தியைஉண் டக்கிவிடுஞ்சீதளமென் பார்க்கலிக்கஞ்செய்மருந்தாம் – வாதைமலத்தைவிழித் தோடத்தைவல்விடத்தை வெப்பைவிலக்கு மகிழம் விதைஉடலுக்கும் குடலுக்கும் வலிமை தந்து ஆண்-பெண் இருவருக்கும் குழந்தைப் பேறுக்குத் திறனளிக்கும் மகிழம்பூ மரத்தை நாமும் வளர்த்துப் பயனடைவோம்.
இயற்கைமருத்துவம். (Nature medicine)
Comments
Post a Comment