Skip to main content

நீண்ட வாழ்வளிக்கும் கரிசலங்கன்னி

சித்த மருத்துவத்தை ஓர் உயிருள்ள மருத்துவம் என்று கூறமுடியும். பெரும்பாலும் அரியமூலிகைகளின் உதவியுடனே சித்த மருத்துவ மருந்துகள் ஆக்கப்படுகின்றன. மனிதர்களில் ஞானிகள் எப்படி பிறரின் மனக்குறைகளை நீக்க உதவுகிறார்களோ அதுபோலவே தாவரங்கள் வகை உயிரினங்கள் பிற உயிரிகளின் உடற்கோளாறுகளை நீக்க உதவுகின்றன.நம் நாடு எப்படி சித்தர்களுக்கும், ஞானிகளுக்கும் பெயர்பெற்று விளங்குகிறதோ அதுபோலவே, பல அரிய மூலிகைகளுக்கும் பெயர்பெற்று விளங்குகிறது. அதனால்தான் சித்தர்களுக்கும் மூலிகைகளுக்கும் அவ்வளவு இணக்கமான உறவுள்ளது. அத்தகைய வியத்தகு மூலிகைகளைப் பற்றித்தான் பனித்துளிகள் தளத்தில் இந்த நெடுந்தொடர் வெளிவருகிறது. பிருங்கராஜா என்றும் தேகராஜா என்றும் வடமொழிச்சொற்களால் சித்தர்கள் கரிசலாங்கண்ணியை அழைத்தார்கள். உண்மையில் இது மூலிகைகளின் மன்னன் தான். இது கரிசாலை என்றும் அழைக்கப்படுவதுண்டு.அண்மையில் நமது தமிழ்மண்ணில் உதித்த அருட்பிரகாச வள்ளல் பெருமான், முதல் நிலையில் வைத்துப் பாராட்டியுள்ள ஒரு மிகச்சிறப்பான மூலிகைதான் கரிசாலை.கரிசாலையைப் பச்சையாகவோ அல்லது சமைத்தோ நாள்தோறும் உட்கொள்பவர்களது உடல் நலம்மிகுந்து வாழ்நாட்களை நீட்டிக்கவல்லது. முதன்மை உள்ளுடம்பாகிய சூக்குமதேகம் வலுப்பெற்று உடல் அழியாநிலை பெறும். முகம் பொலிவு பெறும்.கரிசாலையைப் பச்சையாக மென்று பல்துலக்கி அந்த சாற்றைப் பெருவிரலால் தொட்டு மேலண்ணத்திலுள்ள மூச்சுப்பாதையில் சுழற்றினால் பித்தநீர், கபநீர் வெளியேறி அந்தப் பாதை தூய்மையடைகிறது. இதனால் எளிதாக மூச்சுவிடும் திறன்பெறும்.கண் ஒளி சிறக்கும். வெள்ளைப்பூ பூக்கும் இந்தக் கரிசாலை கிடைக்காதபோது மஞ்சள் பூப்பூக்கும் பொற்றலைக் கையாந்தகரை என்னும் மஞ்சள்க் கரிசாலையினை பயன்படுத்தலாம்.நல்ல நீர்வளமுள்ள இடங்களான ஆற்றங்கரை, வாய்க்கால் கரைகளில்செழித்துவளரக்கூடியவை இவை. மஞ்சள் கரிசாலையில் தங்கச் சத்து உள்ளது. வெள்ளைக் கரிசாலையில் இரும்புச் சத்து உள்ளது. உதிரத்தைத் தூய்மையாக்கும். கல்லீரல் மண்ணீரலை வலிமைப்படுத்தும்.புதிய ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு கரிசாலையிலுள்ள சத்துக்கள் பின்வருமாறு அளக்கப்பட்டுள்ளன.புரோட்டீன் எனப்படும் புரதம்4.4 கிராம்தாதுப்பொருட்கள்4.5 கிராம்இரும்புச்சத்து8.9 கிராம்கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து9.2 கிராம்கொழுப்பு0.8 கிராம்கால்சியம் எனப்படும் சுண்ணாம்புச்சத்து306 மில்லி கிராம்பாஸ்பரஸ்462 மில்லி கிராம்கிடைக்கும் வெப்ப ஆற்றலின் அளவு62 கலோரிகரிசலாங்கண்ணி கீழாநெல்லியுடன்சேர்த்துச் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய்க்கு அருமையான மருந்தாகும். சிறுநீர்த்தடை, எரிச்சல் முதலானவையும் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பையும்நீக்கி நலம்பெற வைக்க வல்ல மருந்தாக கரிசாலை பயன்படுகிறது.கை,கால் வீக்கம் மற்றும் பாதத்தில் உண்டாகும் வீக்கம் முதலானவை குறையும்.எனவே கரிசாலையினைச் சமைத்து உண்டு உடலில் இரும்புபோன்ற உறுதியையும், தங்கம் போன்ற மினுமினுப்பையும் பெறுங்கள்.தொடரும்…

Comments

Popular posts from this blog

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போ...

உலர் திராட்சை

உலர் திராட்சை : திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் ...

தயிர்

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச ்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ...