Skip to main content

சீரகம்

Pimpinel Anisum என்ற தாவரவியல் பெயர்கொண்ட சோம்பு எனும் பெருஞ்சீரகம் நடுத்தரைக்கடல் பகுதியில் முதலில் தோன்றியது. பல்கேரியா, சைரேசு, பிரான்சு, செருமனி, இத்தாலி, மெக்சிகோ, தென் அமெரிக்கா, சிரியா, துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.இந்தியாவில் இராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் சிறு அளவில் பயிரிடப்படுகிறது. நம் நாட்டின் தேவைகளுக்கு அதிகமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிசெய்யப்படுகிறது.இதிலுள்ள சத்துக்கள் பின்வரும் அட்டவணையில் சொல்லப்படுகின்றன,சத்துக்கள்விழுக்காடுபுரதம்18சத்து எண்ணை2.7கொழுப்பு எண்ணை8 முதல் 23சர்க்கரை வகை3.5மாவுச்சத்து5நார்ச்சத்து12 முதல் 25சாம்பல்சத்து6 முதல் 10குளோரின்சிறிதளவுஇது சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் உணவிலும் பெரிதும் பயன்படுகிறது. மேலும் அடுமனைகளில் (Bakery) செய்யப்படும் உணவுப்பொருட்கள், இனிப்புவகைகள், குளியல் கட்டிகள் (Soap), பல்பொடி, மதுவகைகள் ஆகியவற்றில் வாசனைக்கூட்டுப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கான கிரைப் வாட்டரில் சோம்பு முக்கியப்பொருள்.5 அடி உயரம் வரை வளரக்கூடிய இதன்செடி மஞ்சள் நிறப்பூக்களுடன் இனிய அழகிய தோற்றமுள்ளது. இதனைத் தோட்டத்தையும் நடைபாதைகளையும் அழகுபடுத்தவும்பயிரிடுவார்கள். தமிழக விவசாயிகள் உற்பத்தியில் ஊக்கம்பெற பயிரிடவேண்டிய பயிர்களில் இதுவும் ஒன்று.முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம் நாட்டு மூதறிஞர் பிளினி அவர்கள் இதை ஆராய்ந்து உடலை மெலிய வைக்கும் குணம் இந்த பெருஞ்சீரகத்துக்கு இருப்பதாகக் கண்டறிந்தார். பின்னர் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த மேல்நாட்டு மூலிகை நிபுணர் வில்லியம் கோவீஸ், சோம்பின் இலை, வேர், விதை ஆகியவற்றை உணவில் எவ்வாறேனும் சேர்த்துக்கொள்பவர்கள் பருத்த உடலினராயிருப்பினும் மேலும் பருமனையாமல் தடுக்கப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.யோனி நோய், குன்மம்,உருட்சை, மந்தம், பொருமல்,பேனமுறு, காசம்பீலிக மிரைப் – பீன உரைசேர்க்கிற வாதம் போஞ்சீர்பெரிய சீரகத்தால்மூக்கு நோயில்லை மொழிஎன்று அகத்திய மாமுனி கூறியிருக்கிறார்.இதை உரிய முறைப்படி உண்பதால் கருப்பை மற்றும் கருப்பை வாயிலில் ஏற்படும் நோய்கள், வயிற்றுவலியால் ஏற்படும் காய்ச்சல், உப்பிசம், உணவு செரிக்காமை, இருமல், இரைப்பு, குரல் கம்மல், மூக்கு நீர்பாய்தல், ஈரல் நோய் மற்றும் வாத நோய் போன்றவை தீரும்.சோம்பை வாலை முறையில் ( Distilation) வடித்தெடுப்பதற்கு சோம்புதீநீர் என்று பெயர். இது நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். வயிற்று வலி, உணவு செரிக்காமை, உப்பிசம், வயிற்றுப்பூச்சி, அடிக்கடி வரும் தும்மல், சளி போன்ற நோய்களுக்கு குழந்தைகள் முதல் அனைவரும் அருந்த தீரும். கண்கள் வலிமை பெறும்.100 கிராம் அளவு பெருஞ்சீரகத்தைஇளவறுப்பாய் வறுத்து, பொடியாக அரைத்து சம அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து ஒரு கண்ணாடிக்கலனில் வைத்துக்கொண்டு காலை மாலை சிறிது உண்டுவர, உணவுச் செரிமானப் பாதை சீரடைந்து சுறுசுறுப்படையும். வாயுத்தொல்லை தீரும். மலச்சிக்கல் தீரும். மூளைக்கு சுறுசுறுப்பைத் தந்து நினைவுத்திறனைக் கூட்டும். உடல்பருமன் குறையும். வயிற்றுப்புண்ஆறும். கிருமிகள் ஒழியும். குழந்தைப் பேரில்லாத பெண்கள் தொடர்ந்து உண்ண கருப்பைக் கோளாறுகள் நாளடைவில் சீரடைந்து கருத்தரிக்க வாய்ப்பு அதிகம். அதிகமாக உண்பதால் தாமதித்த மாதவிடாயைத் தூண்டும்.இதையே ஒவ்வொரு ஆண்டும் சித்திரைமாதம் தொடங்கி 90 நாட்கள் சாப்பிட்டுவந்தால் அந்த ஆண்டு முழுவதும் வேறெந்த நோயும் அண்டாது.25 கிராம் அளவு பெருஞ்சீரகம், 5 கிராம் அளவு கடுக்காய்த் தோல், 250 மில்லி தண்ணீரில் கசாயம் வைத்து வடித்து 2 தேக்கரண்டி தேன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் உண்பதால் உடலிலுள்ள ஊளைச் சதை குறையும். இதை அலுமினியக் கலன்களில் செய்யக்கூடாது; மாறாக வெண்ணுலோகக் (சில்வர்) கலன்களில் செய்யவும்.25 கிராம் அளவு சோம்பு மட்டும் சிறிது வறுத்து அதிலேயே 250 மில்லி அளவு தண்ணீர் விட்டு 30 மில்லியாகச் சுண்டக்காய்ச்சி காலை மாலை குடித்து வந்தால் சளி,இருமல், தும்மல், மூக்கடைப்பு, காய்ச்சல், மூச்சுவிடச் சிரமம், உணவு செரியாமை ஆகியவை நீங்கி நலம் பெறமுடியும்.இப்படிப் பல நன்மைகள் வழங்கும் சோம்பு எனும் பெருஞ்சீரகத்தைப் பயன்படுத்தி சோம்பலின்றி உழைத்து எல்லா வளமும் பெற்று வாழ்வோம்.

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு