Skip to main content

சுக்கு

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. முறைப்படி உலரவைத்த இஞ்சிதான் சுக்கு. இந்தியாவின் ஐந்து இன்றியமையாத நறுமணப் பொருட்களில் ஒன்று. Gingiber Officnallinn எனும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த மூலிகை இந்தியமக்களின் அன்றாட உணவிலும் மருத்துவத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது.புவியில் உற்பத்தியாகும் அளவில் 50 விழுக்காடு இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது. அதில் கேரளாவில் 70 விழுக்காடு விளைகிறது. அதிலும் கொச்சியில் விளையும் வகைதான் புவியிலேயே சிறந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஐம்பது நாடுகளிக்கு சராசரியாக 7 ஆயிரம்டன் அளவுவரை சுக்கு ஏற்றுமதியாகியுள்ளது.தொன்மைக்கால கிரேக்கர்களும், ரோமாபுரி மக்களும் இதை விரும்பிசெங்கடல் வழியாக அரேபிய வணிகர்களிடமிருந்து வரப்பெற்றார்கள். செம்மண் சேர்ந்த வண்டல்மண் அல்லது இரும்பகக் களிமண் சேர்ந்த வண்டல் மண்ணில் இது செழிப்பாக வளரும். இதில் அடங்கியுள்ள சத்துக்க்கள் பின்வருமாறு,புரதம்8.6கொழுப்பு6.4கால்சியம்0.1பாஸ்பரஸ்0.15இரும்பு0.011சோடியம்0.03பொட்டாசியம்1.4கலோரி மதிப்பு 100 கிராம் அளவில் 300 கலோரி அளவுஉயிர்ச்சத்துக்கள் (Vitamins) A 1175U, B1 0.05 மி.கி., B2 0.13 மி.கி., நியாசின் 0.9 மிகி, C 12 மி.கி.சித்தர்கள் இதற்கு விடமுடியாத அமுதம் என்று காரணப்பெயரிட்டுள்ளார்கள். சுக்குக்கு புறணி ஆதாவது மேல் தோல் நச்சு. அதை நீக்கினால் உள்ளிருப்பது அமுதம். இது ஏகநிவாரணி என்றும் அழைக்கப்படும். இதன் முக்கியப்பணி வெப்பமுண்டாக்கி, பசித்தீயைத் தூண்டி வாயுவை அகற்றுதல். ஒரு துண்டு சுக்கு வாயிலிட்டு மெல்ல பல்வலி, தொண்டைக்கட்டு, குரல் கம்மல் தீரும்.சுக்குப்பொடியை சிறு முடிச்சாகக் கட்டி காதில் சொருகிவைக்கக் காதடைப்பு, வலி, சீதளம் நீங்கும். தாய்ப்பால் அல்லது பால்விட்டரைத்து பற்றுப்போட தலைவலி தீரும். இதனுடன் சிறிது பெருங்காயம் சேர்த்து பால்விட்டரைத்து மூட்டுவலி, இடுப்பு வலிக்குப் பற்றுப்போட நலமடையும்.சுண்டைக்காயளவு சுக்குப்பொடி எடுத்து தூய்மையான வெள்ளைத்துணியில் முடிந்து, 5 மில்லி லிட்டர் அளவு பாலில் ஊறவைத்து 5 நிமிடங்கள் கழித்து முடிச்சை எடுத்துவிட்டு அந்தப்பாலை இரண்டு கண்களிலும் சில சொட்டுக்கள் விட்டால் அதிகக்கோபம், மன அழுத்தம், மன நோயாளிகளின் வெறியாட்டம் ஆகியவை தீர்ந்து மன அமைதி ஏற்படும். (இவ்வாறு செய்யும்போது முதலில் எரிச்சலுண்டாகும் பின் குளிர்ச்சியாக மாறும்). தலைவலி, சீதளம் நீங்கி மன அகங்காரத்தை ஒடுக்கும்.ஒரு குவளை பாலில் 2 கிராம் அளவு சுக்குப்பொடியும் சர்க்கரையும்சேர்த்து காலை மாலை பருகினால் மூட்டுவலி, வாயு, அசதி நீங்கி உடற்சுமை குறையும்.உப்பைத்தண்ணீர் விட்டரைத்து சுக்கின்மேல் கவசம் போல்தடவிக் காயவைத்து, கரிநெருப்பில் சிறிது சுட்டு எடுத்து நன்கு சுரண்டிவிட்டு பொடித்து கண்ணாடிக்கலனில் மூடிவைக்கவும். இதனைச் சுண்டைக்காயளவு காலை, மாலை உணவுக்கு முன் புளித்த மோரில் கலந்துதர பசிக்குறைவு, வயிற்றுப்பொருமல், இரைச்சல், சூட்டுப் பேதி நீங்கும்.இந்தப்பொடி 50 கிராம் அளவு, மிளகுப்பொடி 10 கிராம் அளவு எடுத்து அதனுடன் சம அளவு நாட்டுச்சர்க்கரை சிறிது நெய் விட்டு இடித்து சுக்குருண்டை செய்துவைத்துக்கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலை மாலை உட்கொண்டு வருவதால் பசியின்மை, வயிற்றுவலி, வாயு, இருமல், வாந்திபேதி, பேதி, குமட்டல், சுவையின்மை, அடிக்கடி வரும் காய்ச்சல், இதய நோய்கள், நரம்பியல் பிணிகள் நீங்கும்.குழந்தை பெற்ற தாய்மார்கள் பொரியும் சுக்குப்பொடி உருண்டையும் காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவருவதால் சீதளம் நீங்கிக் கருப்பை தூய்மையாகி குழந்தைக்கு நல்ல பாலும் உடலில் உற்பத்தியாகும். சர்க்கரைக்கு மாற்றாக பனை வெல்லம் சேர்ப்பது இன்னும் சிறப்பானதாகும்.சுக்குப்பொடி 200 கிராம், வறுத்த மிளகு, திப்பிலி, வகைக்கு25 கிராம் அளவு அதிமதுரப்பொடி, சிறியாநங்கைப் பொடி வகைக்கு 25 கிராம், இந்துப்பு 5 கிராம் அளவுகலந்து வைத்துக்கொண்டு, காலை மற்றும் இரவு உணவுக்கு முன் 2 கிராம் அளவு எடுத்து தேன் கலந்து உண்டு பின் வெந்நீர் குடிப்பதால் கொழுப்பும் உடல் பருமனும் குறையும். பித்தம், வாயு, கபம் குறையும்.இது உலர்த்தப்படாமல் இஞ்சியாக இருக்கும்போது, தோல் சீவி சாறு எடுத்து 10 நிமிடங்கள் தெளியவைத்து சம அளவு எலுமிச்சைச் சாறும் தேனும் கலந்து காலை 6 மணிக்கும் மற்றும் மாலை 5 மணிக்கும் 1 தேக்கரண்டி அளவு சாப்பிடுவதால் வாய்க்கசப்பு, பித்தம், தலைச்சுற்றல், உதிரக் கொதிப்பு, செரியாமை, பசியின்மை நீங்கி குழந்தைகளும் பெரியவர்களும் முறையாகப் பசித்து சாப்பிடுவார்கள்.சாப்பிடாத குழந்தைகளை அடித்து விரட்டுவதைவிட்டு இதைச் செயலபடுத்திப் பயனடையுங்கள். இது ஜம்பீர மணப்பாகு என்ற பெயரில் நமது மையத்தில் கிடைக்கிறது.இஞ்சியைத் தோல் சீவி சிறுவில்லைகளாக அறுத்து தேனில் போட்டு சிலநாட்கள் வெய்யிலில் வைத்தெடுத்துக் கண்ணாடிக்கலன்களில் அடைத்து வைத்துக்கொள்ளவும். இந்த இஞ்சித்தேனூறலை காலை வெறும் வயிற்றில் 5 துண்டு சாப்பிடுவதால் மேற்கண்ட நன்மைகளைப் பெறலாம். இது ஒரு கற்பமுறை. செரியாமைக் கோளாறுகளைவிரட்டிவிட்டால் வேறெந்த நோயும் நம்மை அணுகாது. எனவே இஞ்சியையும் சுக்கையும் பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு