Skip to main content

துளசி

நம் நாட்டில் எங்கும் வளரும் இந்தச் செடியினம், Ocimum Sanctum என்ற தாவரவியல் பெயரால்அழைக்கப் படுகிறது. துளசியில் 22 வகைகள் உள்ளன. நாம் பொதுவாகக்காண்பது நல்துளசி, நாய்த்துளசி, கருந்துளசி, எலுமிச்சந் துளசி, கற்பூரத் துளசி ஆகியவைதான்.துளசி பயிரிடும் இடத்தில் மண்ணும், காற்றும், நீரும் தூய்மையடைகிறது. காற்றால் பரவக்கூடிய இன்புளூயன்சா, ப்ளூ, போன்ற நச்சுக்காய்ச்சல்கள் அண்டாது. இதன் வாசம் நுண்கிருமிகளைக் கொல்கிறது. தொற்று நோயுள்ளவர்களைப் பார்க்கப் போகும்போது பையில்/ கைக்குட்டையில் கொஞ்சம் துளசியிலைகளை வைத்துக் கொண்டு முகர்ந்துகொண்டிருந்தால் கிருமிகள் நமக்குப் பரவ வாய்ப்பில்லை.ஐயம் வயிறுளைச்ச லஸ்திசுரந் தாகமும்போம்பைய சுரமாந்தம் பறக்குங்காண் – மெய்யாகவாயின ரோசகம்போம் வன்காரஞ் சூடுள்ளதூய துளசிதனைச் சொல்!என்று அகத்தியர் குணவாகடத்தில் உள்ளது. கார்ப்பும், வெப்பமும் உள்ள தூய துளசியால் கபநோய்கள், பலவகைக் காய்ச்சல் நோய்கள், எலும்புக் காய்ச்சல், அதிக நீர்வேட்கை, வயிறுளைதல், நாவில் சுவையின்மை நீங்கும்.வைணவக் கோயில்களில் இறைவனுக்குத் துளசியினால் அர்ச்சனை செய்து தாமிரப் பாத்திரத்திலுள்ள தூய நீரில் துளசியிலைகளைப் போட்டுத் தீர்த்தமென வழங்குவது மரபு. இறைவழிபாடு என்ற பெயரில் மருத்துவத்தை நடைமுறைப் படுத்தி நோயற்ற வாழ்வுக்கு வழிவகை செய்துள்ளார்கள் நமது முன்னோர்கள்.துளசியைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கப் படுகிறது. அடிக்கடி துளசி சாப்பிடுவதால் கொடிய தேள்கடி நச்சு ஏறாது என்று ஆப்பிரிக்கர்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது. ஐரோப்பாவின் சில பகுதிகளில் ஓர் இளம்பெண் தன் வீட்டு வேலைக்காரியிடம் கொடுத்தனுப்பும் துளசியை ஒரு வாலிபன் பெற்றுக்கொண்டால் அந்த இளம்பெண்ணை வாலிபன் காதலிக்க சம்மதிப்பதாக நம்பப்பட்டுவந்தது. மத்தியத் தரைக்கடல் நாடுகளில் அன்புக்குரியவர்களை அடக்கம்செய்த இடத்தில் துளசியைச் சமர்ப்பிப்பது சிறந்த மரியாதைக்குரிய செயலாகக் கருதப்படுகிறது.17ம் நூற்றாண்டில் இலண்டன் நகரில் ஒருவரால் சாஸ் எனப்படும்கூழ்தயாரிப்பில் நாய்த்துளசி என்னும் காஞ்சாங் கோரை இலையைப் பயன்படுத்தப்பட்டு இனிய மணம் கமழும் சூப் எனப்படும் சாறு, குழம்பு வகைகள் செய்யப்பட்டு பெருஞ்செல்வம் திரட்டப்பட்டது. அதன்பின் ஐரோப்பிய சமையற்கூடங்களில் பச்சடி, சூப் எனப்படும் சாறு, மீன் உணவு வகைகளில் இதனைச் சேர்த்துச் சுவையும் மணமும் கொண்டதாக செய்யப்படுகிறது.மும்பையிலுள்ள விக்டோரியா தோட்டத்தில் ஒருபொழுது நடந்த வேதியியற் கண்காட்சியின் போது அங்கிருந்த அனைவரும் கொசுக்கடியால் அவதிப்பட்டார்கள். இதனைப் பார்த்த ஒரு பெரியவர், அந்தத் தோட்டத்தில் பல இடங்களில் துளசியைப் பயிரிடும்படி கூறினார். அதன் பிறகு அங்கு கொசுத்தொல்லை அறவே ஒழிந்தது.இறந்த உடலை அழுகிப்போகாமல் காக்கும் திறன் துளசிக்குண்டு. இதனை நமது முன்னோர்களும், அறிவியலாளர்களும் மெய்ப்பித்துள்ளார்கள். சித்தர்கள் சமாதிநிலை அடையும்போது அவர்களின் உடலைச் சுற்றி கழுத்துவரை பசுஞ்சாணத் திருநீறு, துளசி, வில்வம் மூன்றுஅடுக்கடுக்காகப் போட்டு சமாதி மூடப்படுவது இன்றும் வழக்கத்திலுள்ளது. இதனால் உயிர்ஒடுக்கம் பெற்று நீண்ட தவத்திலுள்ள அவ்வுடல் எக்காலத்திலும் பூச்சி புழுக்கள் அணுகாமல் காப்பாற்றப் படுவதாகக் கூறப்படுகிறது.1978ம் ஆண்டில் ஜிப்மர் ஆராய்ச்சிக் கூடத்தில் ஆண் வெள்ளெலிகளுக்குத் துளசியைத் தொடர்ந்து கொடுத்தபின் இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தப்பட்டபோது பெண் எலிகளுக்குக் கருஉருவாகவில்லை. ஆண் எலிகளின் விந்துவைச் சோதித்துப்பார்த்ததில் உயிரணுக்கள் இல்லை. ஆனால் சேர்க்கை விருப்பமும் சுறுசுறுப்பும் குறையவில்லை. எனவே இதன் பயன் என்னவென்று தெரிந்துகொண்டிருப்பீர்கள்.மூக்கில் சளி நீராக வடியும்போது10 துளசியிலை, சிறுதுண்டு இஞ்சி சேர்த்து மென்று சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் சளி கட்டுப்படும். உடல் அலுப்பு, காய்ச்சல் உள்ளபோது வெந்நீரில் 1 கைப்பிடி துளசியைப் போட்டு கொதிவரும் போது போர்வையால் மூடிஆவிபிடித்தபின் 20 துளசியிலை 7 மிளகு தட்டிப்போட்டு 2 குவளைத் தண்ணீரில் கொதிக்கவைத்து 1/2 குவளையாகச் சுருக்கிவடித்து தேன் 1 தேக்கரண்டி கலந்து சாப்பிட உடலலுப்பும், காய்ச்சலும் தீரும்.கண்ணில் கட்டிவந்தால் நாள்தோறும் துளசிச் சாறு தடவிவரக் நலமடையும். பாலில் 10 இலைகளைப் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் பாலிலுள்ள கபக்குற்றம் நீங்கும். துளசிசாறு 1/2 தேக்கரண்டி, கற்பூரவல்லி இலைச்சாறு 1 தேக்கரண்டி மற்றும் தேன் 1 தேக்கரண்டி கலந்து இளஞ்சூடாக்கி குழந்தைகளுக்குத்தந்தால் கபம், இருமல், சளி நீங்கி நலமடைவர். தலையில் பேன் தொல்லை உள்ளவர்கள், தலையணையில் துளசி இலைகளைப்பரப்பி மெல்லிய துணியால் மூடி அதன்மீது தலைவைத்துப் படுத்து உறங்கினால் பேன்கள்கூட்டம் தலையைவிட்டு இறங்கி ஓடிஒழியும்.மூன்று நாட்கள் இதனைச் செய்யவேண்டும்.துளசியிலை, நொச்சியிலை, வேப்பிலை கலந்து மாலைநேரம் வீட்டில் புகைபோட கொசுத்தொல்லை அறவே ஒழியும். காற்றும் தூய்மைப்படும்.பச்சையாகக் கிடைக்காதவர்கள், நமது மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப் படுகின்ற துளசிப் பொடியை 1/2 தேக்கரண்டி அளவு காலை இரவு நேரங்களில் தேன்கலந்து சாப்பிட இதயத்துக்கும் ஈரலுக்கும் வலிமையைக் கொடுக்கும். பசியுண்டாகும். கபம் நீங்கி நுரையீரல் தூய்மையடையும். பொடிபோடுவதுபோல நுகர மூக்கடைப்பு மூக்கிலிருக்கும் கிருமிகள் ஒழியும். வாயிலிட்டுச் சுவைத்தால் பற்கூச்சம், பல்வலி தீரும். நமதுவசீகரா பற்பொடியில் இது சேர்க்கப்படுகிறது.சிறப்பான நலனை நமக்களிக்கும் துளசியைப் பயன்படுத்தி நோயற்ற வாழ்வைக் கொண்டாடுவோம

Comments

Popular posts from this blog

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போ...

உலர் திராட்சை

உலர் திராட்சை : திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் ...

தயிர்

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச ்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ...