Skip to main content

இளநீர்


இளநீர்

இயற்கை பானமாக அழைக்கப்படும்
இளநீரை அப்படியே சாப்பிடலாம்.
வெயில் காலங்களில் அனைவராலும்
பருகப்படுவது. முழுமையான
இயற்கை பானம் என்றே இளநீரைக்
குறிப்பிடலாம். இளநீரானது 200
மில்லி முதல் ஒரு லிட்டர் வரை,
இளநீரின் வடிவம், அளவிற்கேற்ப
நீரைக் கொண்டிருக்கும். சர்க்கரை,
வைட்டமின்கள், தாதுஉப்புக்கள்,
எலக்ட்ரோலைட்டுகள் மற்றும்
நொதிகள் போன்ற
உடலுக்கு நன்மை பயக்கும்
பெட்டகமே இளநீர்
என்று சொல்லலாம்.
புத்துணர்ச்சி பானமாக
இளநீரை அருந்தலாம்.
இயற்கை வழங்கிய கோடையின்
கொடையே இளநீர். உடலின் உஷ்ணம்
தணித்து குளிர்ச்சியூட்டும். இளநீரில்
ஒற்றைச்சர்க்கரை,
எலக்ட்ரோலைட்டுகள் மற்றும்
தாதுஉப்புக்கள் மிகுந்துள்ளது.
சைடோகின்கள் எனும் தாவர
ஹார்மோன்கள் இளநீரில்
நிரம்பி உள்ளது. இது வயது மூப்பு,
ரத்தக்கட்டு ஆகியவற்றுக்கு எதிராக
செயல்படும்.
புற்றுநோய் எதிர்ப்புத் தன்மையும்
வழங்கும். இளநீரிலுள்ள
அமினோ அமிலங்கள், நொதிகள்,
தாதுஉப்புகள் மற்றும்
கொழுப்பு அமிலங்கள் உடல் திரவ
இழப்பை உடனே ஈடுகட்டும்.
அத்துடன் உடலுக்கு தேவையான
ஆற்றலையும் வழங்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும்போது
உடலில் ஏற்படும்
நீர்ச்சத்து இழப்பை ஈடுகட்ட இளநீர்
வழங்குவார்கள்.
நொதிகளை சுறுசுறுப்பாக இயங்கச்
செய்யும் நொதிக்காரணிகள் இளநீரில்
நிறையவே உள்ளன. பாஸ்பாடேஸ்,
கேட்டலேஸ், டிஹைட்ரனேஸ்,
டயஸ்டேஸ், பெராக்சிடேஸ்,
ஆர்.என்.ஏ. பாலிமரெசஸ் போன்ற
நொதிகள் உள்ளன. இவை ஜீரணம்
மற்றும் வளர்ச்சிதை மாற்றங்களில்
பங்கெடுக்கும். பழ
வகைகளுக்கு ஈடாக கால்சியம்,
இரும்பு, மாங்கனீஸ், மக்னீசியம்,
துத்தநாகம் போன்ற அத்தியாவசிய
தாதுஉப்புகள், அதிகமாகவே உள்ளது.
பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின்களான
ரிபோபிளேவின், நியாசின், தயமின்,
பைரிடாக்சின், போலேட்ஸ்
ஆகியவை மிகுதியாக இருக்கிறது.
உடல்
உள்ளுறுப்புகளை புத்துணர்சியாக
வைப்பதில் இவற்றின் பங்கு அதிகம்.
பொட்டாசியம் இளநீரில்
மிகுந்துள்ளது. 100 மில்லி இளநீரில்
250 மில்லிகிராம் பொட்டாசியம்
மற்றும் 150 மில்லிகிராம் சோடியம்
உள்ளது.
இவை உடலுக்குத் தேவையான
மின்சக்தி வழங்கும் பொருளாக
பயன்படும். பேதியின்போது ஆற்றல்
இழப்பை தடுப்பதிலும்பங்கு வகிக்கும்.
‘வைட்டமின்’ சி, இளநீரில் குறைந்த
அளவு (2.4மில்லிகிராம்) உள்ளது.
இது சிறந்த நோய் எதிர்ப் பொருளாக
செயலாற்றும்.

Comments

Popular posts from this blog

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போ...

உலர் திராட்சை

உலர் திராட்சை : திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் ...

தயிர்

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச ்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ...