Skip to main content

கற்றாழை

கற்றாழை

உஷ்ண வாயு தொடர்பான
பிணிகளை மிகவும் துரிதமாகவும்,
பூரணமாகவும் இது குணப்படுத்தும்
கற்றாழை எங்கும் காணக் கிடைக்க
கூடியது கற்றாழை.
கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய
நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல்,
மாதவிடாய் கோளாறுகள், உடல்
வெப்பம், உடல் காந்தல் போன்ற
பாதிப்புகளுக்கு, சோற்றுக்
கற்றாழை உள்ள சோறு போன்ற
கலவையை எடுத்து சுத்தமான நீரில்
அலசிக் கொள்ள வேண்டும்.
பிறகு அதற்குச் சமமான அளவில்
பனங்கற்கண்டினை அத்துடன்
சேர்த்து காலை,
மாலை இருவேளைகளிலும்
உண்டு வரவேண்டும்.
இதனால் உடல் உஷ்ணமும்,
எரிச்சலும் குறையும். வெயில்
காலத்தில் சிலருக்கு கண்களில்
எரிச்சல் உண்டாகி, கண்கள்
சிவந்து விடும். அப்போது,
கற்றாழையின்
ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப்
பகுதி வெளியே தெரியும்படி
இரண்டாகப் பிளந்து,
கண்களை மூடி கண்களின்
மீது அந்தத்
கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு
சற்று நேரம் அப்படியே படுத்திருக்க
வேண்டும். இப்போது கண் எரிச்சல்,
குறைவதோடு, சிவந்த நிறமும்
மறைந்து விடும்.
இதை இரவு நேரங்களில்
தூங்குவதற்குமுன் செய்து வந்தால்
நல்ல உறக்கம் வருவதோடு,
உடலுக்கு பல நன்மைகளும்
கிடைக்கும். நன்றாக சதைப்பற்றுள்ள
கற்றாழை மடல்களைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த
சதை பகுதியை சிறுசிறு துண்டுகளாக
வெட்டி கொள்ள வேண்டும். இந்த
துண்டுகளைப் பலமுறை தண்ணீர்
விட்டு கழுவவேண்டும். அவற்றின்
வழுவழுப்புத் தன்மையும் நாற்றமும்
அகலும் வரை கழுவி சுத்தம் செய்ய
வேண்டியது முக்கியம்.
வாய் அகன்ற பாத்திரம்
ஓன்றை எடுத்து அதில் கழுவி சுத்தம்
செய்து வைத்திருக்கும் கற்றாழைத்
துண்டுகளைப்
போட்டு பனங்கற்கண்டு அரை கிலோ,
வெள்ளை வெங்காயம் கால்
கிலோ ஆமணக்கு என்ணெய்
ஆகியவற்றை சேகரித்து கொள்ள
வேண்டும். வெங்காயத்தை மட்டும்
இடித்து சாறு எடுத்து மற்ற
பொருட்களோடு கலந்து
அடுப்பிலிட்டுச் சிறு சிறு தீயாக
எரிக்க வேண்டும்.
சாறு சுண்டி சடசடப்பு அடங்கும்
வரை வைத்திருந்து பிறகு இறக்கி
சூடு ஆறிய
பிறகு கண்ணாடி ஜாடியொன்றில்
பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள
வேண்டும். வயிற்றில் ரணம், மாந்தம்,
வயிற்றுவலி, புளியேப்பம், பொருமல்,
மற்றும் உஷ்ண வாயு தொடர்பான
பிணிகள் தோன்றினால்
வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம்
காலை,மாலை,கொடுத்து வர நல்ல
முறையில் குணம் தெரியும்.
கற்றாழை உடல் முதல் உள்ளம்
வரை அனைத்தையும்
குணப்படுத்தும் சிறந்த மருந்து

Comments

Popular posts from this blog

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போ...

உலர் திராட்சை

உலர் திராட்சை : திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் ...

தயிர்

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச ்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ...