Skip to main content

காட்டுச்சுரை

காட்டுச்சுரை

இதனை பேய்ச்சுரை அல்லது
காட்டுசுரை எனவும் அழைப்பர்.
காட்டுச்சுரை (அ)
பேய்ச்சுரை கசப்பாக இருக்கும்.
மருத்துவத்துக்கு இவற்றின் இலை,
கொடி, காய், விதை என அனைத்தும்
பயன்படுகிறது. இந்த பேய்ய்சுரையின்
மருத்துவக் குணங்கள் என்ன
என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
எவ்வளவு கடுமையான
விஷக்கடியாக இருந்தாலும்
இது விஷத்தை முறித்து துரித
குணத்தை உண்டாக்கிவிடும்.
பேய்ச்சுரையின் வேரைச்
சேகரித்து நன்கு அரைக்க வேண்டும்.
இதை விஷத்
தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு
இரண்டு கொட்டைப்பாக்கு அளவு
உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.
இந்த இலையை அரைத்து கடிவாயில்
வைத்துக் கட்டிவிட வேண்டும்.
திடீரென ஏற்படும் பேதி,
வாந்தி முதலியவற்றால்
விஷத்துக்கு முறிவு ஏற்பட்டு
விஷக்கடிக்கு ஆளானவரின் உயிர்
மீளும்.
சிலவகைப் பாம்புகள் கடித்தால்
அவற்றின் விஷ வேகம் மிகவும்
துரிதமாக இரத்தத்தில் கலந்து,
இருதயத்தை அடைந்து முச்சடைத்து
மனிதன் இறந்துவிடுவான் , ஆனால்
அவசர உணர்வோடு பேய்ச்சுரையை
உபயோகித்தால்
விஷத்தை முறித்துவிடலாம்.
கொடிய விஷப்பாம்பு கடித்து மனிதன்
உணர்விழந்துவிட்டான் என்றால்
முதலில் நாம்
செய்யவேண்டியது அவனுக்கு
உணர்வு ஊட்டி நினைவுண்டாக்க
வேண்டியத்தான்.
இதற்கு பேய்ச்சுரையின் இலைகளைக்
கசக்கிப் பிழிந்து சாறெடுத்து சம
அளவு தும்பை இலைச்சாறு சேர்த்து
மூக்கில் சில துளிகள் விட்டு ஊதிவிட
வேண்டும்.
ஒரு தும்மலோடு விஷக்கடிக்கு
ஆளானவருக்கு நினைவு திரும்பிவிடும்
.
நினைவு திரும்பிய
மறுகணமே பேய்ச்சுரையின்
வேரை அரைத்து உள்ளுக்குக்
கொடுத்துவிட வேண்டும். உடன் விஷ்
முறிவு ஏற்பட்டு குணம் தெரியும்.
விஷக்கடிக்கு உள்ளானவரை விஷம்
முறிவு ஏற்பட்டு சில நாட்கள்
வரை பத்திய உணவு மேற்கொள்ளச்
செய்ய வேண்டும்.

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு