Skip to main content

முருங்கைக்காய்

முருங்கைக்காய்

அனைவரும் விரும்பிச் சாப்பிடும்
முருங்கைக்காயில்
எண்ணிலடங்கா பயன்கள்
இருக்கின்றன. ஆனால் நாம்
அறிந்திருப்பதோ சில
பயன்களை மட்டுமே.
பயன்களை அறிந்து காய்கறிகளை
சாப்பிடுவோமே பகுதியில் இன்று நாம்
பார்க்க விருப்பது முருங்கைகாய்.

முருங்கைகாய்.
என்ன சத்துகள் இருக்கு:
தினமும்
முருங்கைக்காய் சாப்பிடுவதால்
கிடைக்கும் சத்துகள். பொதுவாக
முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும்
இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ,
சி இருக்கிறதை தெரிந்துகொள்ள
வேண்டும்.. மேலும் புரதம் 2.5
கிராம், கார்போஹைட்ரேட் 3.7
கிராம்,தண்ணீர் 86.9%,
கலோரி 26,ஃபைபர் 4.8
கிராம்,கொழுப்பு 0.1 கிராம்,விட்டமின்
ஏ 0.11 மிகி,வைட்டமின்
பி (கோலைன்) 423 மி.கி,வைட்டமின்
பி 1 (தயாமின்) 0.05 மி.கி, விட்டமின்
பி2 (ரிபோப்லாவின்) 0.07
மி.கி,வைட்டமின் பி3 (நிகோடினிக்
அமிலம்) 0.2 மிகி,கால்சியம் 30
மில்லி கிராம்,மெக்னீசியம் 24
மில்லி கிராம் கொண்டுள்ளது.

யாருக்கு நல்லது :
குழந்தைகள்
முருங்கைக்காய்
விதைகளை சாப்பிட்டால்
மலக்குடல்களில் சேரும்
கிருமி பூச்சிகள் வெளியேறும்,
மலச்சிக்கலால் அவதி படுபவர்கள்,
மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள்,
சளி பிரச்சனை உள்ளவர்கள்,
ரத்தசோகை,வயிற்றில்
புழு பிரச்சனை உள்ளவர்கள்,
கணையம், கல்லீரலில் வீக்கம்
உள்ளவர்கள் சாப்பிடலாம்.

யாருக்கு நல்லதல்ல:
முதியவர்கள்,
இதய நோயாளிகள், மூட்டு நோய்
உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
ஏனெனில் வாயுப்
பிடிப்பை ஏற்படுத்தும்.

பலன்கள்:
நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம்
தரும். முருங்கைகாயை வாரத்தில்
இரண்டு முறை சாப்பிட்டு வந்தால்
வயிறு வலி குணமாகும் மேலும்
மூலம் தலைவலி, இரத்த நுகர்வு,
சிறுநீர் நீர் சுத்திகரிப்பு, உடல்,
எரிவாயு பிரச்சினைகள் நீங்கும்
உடலில் வெப்பநிலை அதிகம்
கொண்டவர்கள் முருங்கைகாய்
சாப்பிட்டு வந்தால் உயர்
வெப்பநிலை குறையும்.
கர்ப்பிணி பெண்கள் முருங்கைகாய
கண்டிப்பாக சாப்பிட வேண்டும்,
ஏனெனில் பிரவசத்திற்கு முன்பும்
பிரவசத்திற்கு பின்பும் ஏற்படக்கூடிய
பிரச்சனைகளை முருங்கைகாய்
நீக்குகிறது. பிரசவத்திற்கு பின்னர்
முருங்கைகாய் சாப்பிடுவதன் மூலம்
தாய்க்கு பால் அதிகரிக்கும். சளியைப்
போக்கும். காய்கள் காய்ச்சலுக்கும்
வயிற்றுப் புழுக்களுக்கும்
எதிரானவை.

Comments

Popular posts from this blog

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போ...

உலர் திராட்சை

உலர் திராட்சை : திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் ...

தயிர்

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச ்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ...