Skip to main content

வெந்தயம்

வெந்தயம்

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால்
என்பது நமது மக்களிடையே காணப்படும்
சில பொதுவான நோய்களாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும்
சிகிச்சை முறைகளுடன், வெந்தயம்
உட்கொள்வது, உறுதுணையாய்
செயல்படுகிறது.
* ஆரம்பக்காலத்தில், 25 கிராம்
வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை,
ஒரு வேலைக்கு 12.5 கிராம்
(தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற
அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய
காலை மற்றும்
இரவு உணவுகளோடு எடுத்தும்
கொள்ளலாம்
* வெந்தயத்தை இரவு முழுவதும்
தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக
இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும்
கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள்
முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட
விதைகள் அல்லது பொடியாக
இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை,
சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா,
தயிர், பருப்பு மற்றும்
காய்கறி கூட்டுகள் செய்யும்
போது அவற்றுடன்
இணைந்து பயன்படுத்தலாம்.
இப்படி செய்யும்போது விதைகளின்
கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது.
* இவைகளை தயார்
செய்யும்போது உண்பவரின்
ருசிப்புத்தன்மைக்கேற்ப
உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து
தயார் செய்யலாம்.
* இரத்தத்தில் சர்க்கரை மற்றும்
கொலஸ்டிரால்
அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை
உட்கொள்ளலாம்.
* வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன்
தினமும் நடைபயிற்ச்சி போன்ற
உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும்
அவசியம். உடல் எடையை குறைப்பதின்
மூலம், இன்சுலின் ஹார்மோனின்
செயல்களை அதிகரிக்க செய்யும்.
* இவ்விதைகளை உட்கொள்ளும்
நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில்
வயிற்றுபோக்கு மற்றும் குடலில்
வாயு உற்பத்தியாவது அதிகமாக
காணப்படும்.
* வெந்தயத்தை உணவாக
பயன்படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட
மற்ற சர்க்கரைநோய்
சிகிச்சை முறைகளையும் பின்பற்ற
வேண்டும்।
இப்படி பயன்படுத்தும்போது சர்க்கரை
வியாதிக்கான மருந்துகளின்
அளவு குறையலாம்.
*ஆயினும் உங்கள் மருத்துவர்
மாத்திரமே நோயின்
தன்மையை கொண்டு எடுத்துக்கொள்ள
வேண்டிய மருந்தின்
அளவுகளை தீர்மானிக்க முடியும்.
சர்க்கரை நோயினால் திடீரென ஏற்படும்
உடல் நலக் கேடுகளுக்கு உடனடியாக
மருத்துவ
ஆலோசனையை நாடுவது அவசியம்.

Comments

Popular posts from this blog

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போ...

உலர் திராட்சை

உலர் திராட்சை : திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் ...

தயிர்

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச ்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ...