Skip to main content

அகத்திக்கீரை

அகத்திக்கீரை:

வெற்றிலைக் கொடி படர்வதற்காகக்
கொடிக்கால்களில் பயிரிடப்படும்
சிறுமென்மரவகை. தமிழ்
நாடு எங்கும் வளர்க்கப்படுகிறது.
கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து
உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர்,
பட்டை ஆகியவை மருத்துவப்
பயனுடையவை. பொதுவாக
வெப்பு அகற்றியாகவும்,
கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல்
பலம் தரும் மருந்தாகவும் பயன்படும்.
1. கீரையை வாரம்
ஒரு முறை சமைத்து உண்ண
வெயிலில் அலைவதால் ஏற்படும்
வெப்பும், மலச்சிக்கல், காபி, டீ,
இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம்
ஆகியவை தீரும்.
2. அகத்தி மரப்பட்டையையும்,
வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக்
(அகத்திப்பட்டைக் குடிநீர்)
குடித்துவர, சுரம், தாகம், கை கால்
எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால்
உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு,
நீர்த்தாரை எரிவு, அம்மைச்சுரம்
ஆகியவை தீரும்.
3. இலைச்சாறும் நெல்லெண்ணெயும்
வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமுறக்
காய்ச்சி வடிப்பதற்கு முன்
கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி,
கிச்சிலிக் கிழுங்கு விளாமிச்சம் வேர்
வகைக்கு 20 கிராம் தூள்
செய்து போட்டுக்
கலக்கி வடிகட்டி (அகத்தித் தைலம்)
வாரம் ஒரு முறை தலையிலிட்டுக்
குளித்து வரப் பித்தம்
தணிந்து தலைவலி நீங்கும். கண்கள்
குளிர்ச்சி பெறும்
எனவே, அகத்திக்கீரையால்
உண்டாகும் பயன்களை அனுபவிக்க
மறக்காதீர்கள்.

Comments

Popular posts from this blog

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போ...

உலர் திராட்சை

உலர் திராட்சை : திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் ...

தயிர்

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச ்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ...