Skip to main content

புதினா

புதினா கீரையின் மருத்துவகுணங்கள் :

கறிவேப்பிலை மற்றும்கொத்துமல்லியைப்போலவே புதினாவும்உணவுக்கு மணமூட்டுவதற்காகப்பயன்படுத்தப்படுகிறது.புதினாக்கீரை பசியைத் தூண்டும்.மணமும் காரச் சுவையும் கொண்டது.அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும்புதினாக் கீரையை மக்கள்விரும்பி வளர்க்கின்றனர்.புதினாக் கீரையில் உடல்ஆரோக்கியத்திற்குத் தேவையானவைட்டமின்களும்,தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.துவையல், சட்னி,பொடி போன்றவை தயாரித்தும் மசால்வடையில் சேர்த்தும்,பிரியானி மற்றும்இறைச்சி வகைகளில் சேர்த்தும்புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.புதினாக் கீரையைத்தொடர்ந்து பயன்படுத்தி வந்தால்இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம்அகலும். சீரணசக்தி அதிகரித்து பசி தூண்டப்படும்.மலச்சிக்கலும் நீங்கும்.பெண்களின் மாதவிலக்குப்பிரச்னைகள் தீரபுதினாக்கீரை உதவுகின்றது.ஆண்மைக்குறைவை நீக்கி முழுமையான இல்லறஇன்பத்தை அனுபவிக்கவும்புதினாக் கீரை உதவுகின்றது.ஊளைச் சதையைக் குறைப்பதற்குப்புதினா சிறந்த மருந்தாகப்பயன்படுகிறது. வயிற்றுப்புழுக்களை அழிக்கஇது உதவுகின்றது. வாய்வுத்தொல்லையை அகற்றுகின்றது.புதினா இலையின்சாற்றை தலைவலிக்குப் பூசலாம்.இளைப்பு நோயையும்,ஆஸ்துமாவையும் புதினாக்கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள்காமாலை, வாதம், வறட்டு இருமல்,சோகை, நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றுக்கும்புதினாக்கீரை சிறந்த மருந்தாகப்பயன்படுகிறது. பல் ஈறுகளில்உண்டாகும் நோய்களையும் புதினாக்கீரை குணப்படுத்துகிறது.புதினாக் கீரையை வீட்டுத்தோட்டத்திலும், தொட்டிகளிலும்எளிதாக வளர்க்கலாம். புதினாக்கீரை வாங்கும்போது இலைகளைப்பயன்படுத்தி விட்டுத் தூர எறியும்தண்டுகளை மண்ணில்ஊன்றி வைத்தால் அவை தளிர்த்துப்புதிய இலைகளைக் கொடுக்கும்.வயிற்றுப்போக்குஏற்பட்ட சமயம்புதினாக்கீரை துவையலை சாதத்துடன்சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்வயிற்றுப்போக்குநிற்கும்.புதினாக்கீரை கர்ப்பிணிகளின்வாந்தியை நிறுத்த ஒரு கைகண்டஔடதமாக இருந்து வருகிறது.புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பலவியாதிகளைக் குணப்படுத்தும்.புதினாக்கீரையைக் கொண்டு ஓர்அருமையான பற்பொடி தயார்செய்யலாம். இந்தப்பற்பொடியை உபயோகித்து வந்தால்பல்லீரல் வேக்காடு, பல்லீரலில்இரத்தம் வருதல், பல் சொத்தை, பல்அசைவு இவைகளைக்குணப்படுத்தும்.வாயில் ஏற்படும்துர்நாற்றத்தைப்போக்க இந்தப்பற்பொடி நன்கு பயன்படும்.இந்தப் பற்பொடியை ஒருவர்தினசரி உபயோகித்து வருவாரானால்,அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமானஎந்த ஒரு வியாதியினாலும்பீடிக்கப்பட மாட்டார்.எவ்வளவு பற்பொடி தேவையோ அந்தஅளவிற்கு புதினாக்கீரையைக்கொண்டு வந்து இலைகளை மட்டும்கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து,அதை வெய்யிலில் நன்றாகக் காயவைக்க வேண்டும்.சருகுபோல காய்ந்தபின்அதை எடுத்து, உத்தேசமாக அந்தஇலை இருக்கும் அளவில் எட்டில்ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன்சேர்த்து உரலில் போட்டு நன்றாகஇடிக்க வேண்டும்.தூளான பின் எடுத்து,மாவு சலிக்கும் சல்லடையில்சலித்து எடுத்து, வாயகன்றபாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவேண்டும்.இதைத் தினசரி உபயோகித்து வந்தால்பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும்.பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும்குணமாகும்.

Comments

Popular posts from this blog

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போ...

உலர் திராட்சை

உலர் திராட்சை : திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் ...

தயிர்

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச ்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ...