Skip to main content

வாழவைக்கும் வாழை

கோவில் திருவிழாக்கள், வீடுகளில் நிகழும் நல்விருந்துகள் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்கள் திறப்புநாட்கள் மேலும் அனைத்து நல்ல நிகழ்வுகளிலெல்லாம் வாயில்களில் மலர் மற்றும் குலையுடன் கூடிய வாழைமரத்தினைக் கட்டுவது நமது நாட்டின் மரபாகக் கருதப்படுகிறது. அதைக்கடந்து உட்சென்றால் முதலில் தட்டுக்களில் நம்மை வரவேற்பதும் வாழைப்பழமே. விருந்தில் பரிமாறப்படுவதும் வாழைப்பழமே.இது பழங்களின் அரசி எனச்சிறப்பிக்கப்படுகிறது. குழந்தைகளையும், உறவினர்களையும் மற்றும் உடல்நலக்குறைபாடுடையோரைப் பார்க்கச் செல்பவர்கள் வாங்கிச்செல்லும் பொருட்களில் வாழைப்பழம் தவறாது இடம்பெறுகிறது. புதுமணத்தம்பதியரை முதல்நாளில்பாலும் வாழைப்பழமும் கொடுத்து இனிமையாக இருத்த வாழ்த்துவது தமிழர் மரபு. வாழ்த்தும்போதும் “வாழையடி வாழையாக” எனக்கூறுவதையும் கண்டிருப்பீர்கள். வாழை அழிவினைச்சந்திக்காத ஒருமரம். ஒரு வாழை மரம்மட்டும் உங்கள் இல்லத்தில் வைத்துவிட்டால் போதும் அது காலம் காலமாக தன் சந்ததிகளை வளரவிட்டுத்தான் செல்லும். மற்றபழங்கள் அதற்கான காலப்பருவங்களில்தான் கிடைக்கும், ஆனால் வாழைப்பழமோ ஆண்டுமுழுவதும் கிடைக்கும் ஒரு சிறப்பான பழவகையாகும்.வாழையில் இருபத்தொரு வகைகள் உள்ளதாகக் கூறுகிறார்கள். அதில்நமக்குக் கிடைக்கக் கூடியவை பூவன், நாடன், கற்பூரவல்லி, இரசதாளி, பச்சைப்பழம், சுகந்தம்,நேந்திரன், மலைவாழை, செவ்வாழை, பேயன் போன்றவைகள்.வாதநோய், மந்தம் உள்ளவர்கள் வாழைப்பழம் மற்றும் வாழைக்காய் ஆகியவற்றை உட்கொள்ளக் கூடாது. அவசியமெனில் மிளகு, பச்சைக்கற்பூரம், சர்க்கரை, பிரண்டைத்துவையல் இதில் ஒன்றைச் சேர்த்துச் சாப்பிடலாம். இப்பழம் பொதுவாகப்பசியாற்றும், மலச்சிக்கலை நீக்கும் வலிமைதரும். இரத்தக் குறைவு, பித்தநோய்கள், மயக்கம் தீரும்.நேந்திரன் வாழை*.இரும்புச்சத்து அதிகம் நிறைந்தது.*.உடலுக்கு வலிமையைத் தரும்.*.குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு ஏற்றது.*.இரண்டாகவெட்டி நீராவியில் அவித்து உண்டால் குழந்தைகளுக்கும் செரிமானம் ஆகாதவர்களுக்கும் உணவு எளிதில் செரிக்கும்.கேரளத்து மக்கள் இதன் அருமையை நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள்.செவ்வாழை*.கண்பார்வை குறைந்து வருபவர்கள் தொடர்ந்து உண்பாராயின் 21 நாட்களுக்குப்பிறகு சிறிது சிறிதாகப் பார்வை தெளிவடையும்.*.ஆண்களுக்கு விந்தணுக்களையும் பெண்களுக்குக் கருமுட்டையையும் வலுப்படுத்தி குழந்தைப் பேறு உருவாக்கும்.*.குருதி (இரத்தம்) விருத்தியடையும்.*.கல்லீரல் வீக்கமும், சிறுநீர் வியாதிகளும் நீங்கும்.மலைவாழை (விருப்பாச்சி)*.நீண்டநாட்கள் புளிக்காமல் இருக்கும்.*.குழந்தைகள் நல்ல வளர்ச்சியடைவார்கள்.*.மலச்சிக்கல் நீங்கும்.பொதுவாக வாழைப்பழங்களில் பொட்டாசியம் எனும் சத்து அதிகமிருப்பதால் உடல்நலத்துக்கு இவை உகந்தவை. இதன்மூலம் பொட்டாசியம் தாதுக் குறைவால் கால்களின் ஆடுதசையில் ஏற்படும் பிடிப்பு (Cramps) முழுமையாக நீங்கும். மாரடைப்பு வராமல் தடுக்கக்கூடிவை. சோடியம்தாது குறைவாக இருப்பதால் குருதிஅழுத்தக்காரர்களும் (Blood pressure) இதனைச் சாப்பிடலாம்.வாழையிலுள்ளTryptophanஎனும் புரதச்சத்து மனச்சோர்வினை நீக்கி மகிழ்வினைத் தருவதால் மனநோய்க்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது. வாழையிலையிலேயே தொடர்ந்து உணவருந்தினால் முகம் பளபளப்பாகி அழகுபெறும், தலைமுடிநரைக்காமல் இருக்கும், நீரிழிவுநேய் அண்டாது அல்லது இருப்பவர்களுக்கு கட்டுப்படுத்தப் படும்.வாழைப்பூவினை முறைப்படி சமைத்து உண்பதால், பித்தத்தால் வரும் வெள்ளைபோக்கு, பைத்தியம், உடற்சூடு,Amebiasisஎனப்படும் அடிக்கடி மலம் கழிக்கும் நோய் ஆகியன நீங்கும். ஆண்களுக்குத் தாதுபலம் உண்டாகும். கணையத்திலும் சிறுநீரகத்திலும்கற்கள் உண்டாகாமல் தடுக்கும். வாழைப்பிஞ்சைச் சமைத்து உண்பதால் குருதி மூலம், அடிவயிற்றுப்புண், மூலக்கடுப்பு, அடிக்கடி சிறுநீர்கழித்தல் ஆகிய நோய்கள் குணமாகும். பத்தியமிருப்பவர்கள் உண்ணச் சிறந்த உணவாகும்..மேலும் காயைச் சமைத்து உண்பதால், பைத்திய நோய், வாயில் நீர்வடிதல், சூட்டு இருமல், பித்த வாந்தி, வாயுக்கழிசல், உடல் வெப்பம் ஆகியவை நீங்கும். வாழைத்தண்டை வாரமிருமுறை சமைத்து உண்டு வந்தால் உடலில் கட்டிய நீரை உடைத்து வெளியேற்றும், சின்னஞ்சிறு கற்களை அகற்றி சிறுநீரகத்தையும், சிறுநீர்ப்பாதையையும் சீராக்கும். ஆனால் அதிகம் உண்பதால் எலும்புகள் வலுவிழக்கும்.வாழைப்பட்டையை உரித்து தீயில் வாட்டி சாறுபிழிந்து தர பாம்புக்கடி நச்சு முறியும். வாழைப்பட்டையில் சுற்றிவைக்கப்பட்ட மூலிகைகள் சிலநாட்கள் வாடாமல் பசுமையாகவே இருக்கும். வாழையின் வேர்க்கிழங்கின் சாறும் நீர்பெருக்கி, கல்லுடைக்கும். சித்த மருந்துகள் உருவாக்கப் பயன்படுகிறது.இவ்வளவு பயன்களை வாழைதருவதால் வாழை தமிழரின் பண்பாட்டுக்குச் சின்னமாகக் கருதப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

Comments

Popular posts from this blog

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போ...

உலர் திராட்சை

உலர் திராட்சை : திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் ...

தயிர்

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச ்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ...