Skip to main content

மருதோன்றி இலை(மருதாணி இலை))

மருதோன்றி இலை..!மருதோன்றி இலையைப் பற்றி அறியாதபெண்களே இருக்கமுடியாது.பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதோன்றியும் ஒன்று. மருதோன்றியில் அளப்பரிய மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். சிலர் வீடுகளின் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும் வளர்த்து வருகின்றனர். மணமகளை அழகுபடுத்தவும்,திருவிழாக் காலங்களிலும் இந்தியப் பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்துவார்கள்.இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை,விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, சரணம், மருதாணி என பல பெயர்களில்அழைக்கின்றனர்.Tamil - MaruthonriEnglish - HennaSanskrit - Rakta garbaMalayalam - MailanchiTelugu - GorantiHindi - MehandhiBotanical Name - Lawsonia inermisகை, கால் எரிச்சல்கை கால்களில் எரிச்சல் உண்டாவதைதடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.நகக்கண்நம் முன்னோர்கள் நகங்களின் மீதுமருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். இதனால் நகங்கள் அழகாகின. ஆனால் தற்காலத்தில் நகப் பாலீஷ் என்ற பெயரில் பல வந்துள்ளன. இவை இரசாயனம் கலந்தவை. இவற்றால் மருத்துவப் பயன்கள் ஏதும் கிடையாது. ஆனால் மருதோன்றி அதிக மருத்துவப் பயன்களைக் கொண்டது.நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதோன்றி விளங்குகிறது.நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதோன்றி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.மேக நோய்கள் நீங்கபாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் மருதோன்றி இலை 6 கிராம், பூண்டுப்பல் 1, நல்ல மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில்மட்டும் சாப்பிட்டு வந்தால் மேகநோய்களின் பாதிப்புகள் நீங்கும். இக்காலங்களில் உணவில்உப்பில்லாமல் சாப்பிடவேண்டும். அதிக காரம், புளி கூடாது.சுளுக்கு நீங்கமருதோன்றி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் குணமாகும்.நல்ல தூக்கம் பெறமருதோன்றியின் பூக்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கச்சென்றால் நல்ல தூக்கம் வரும். மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டைதணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்.மருதோன்றியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில்அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமூ தெரபி சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகளின் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடுகின்றன. எனவே முடியில்லா குறை தெரியாமல் இருக்க தலையில் பல டிசைன்களில் மருதாணி இட்டுக்கொள்கின்றனர்.மருதோன்றி இட்டுக்கொண்டால்மனஅழுத்தம் குறைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.மருதோன்றியின் மருத்துவப் பயன்களை பல மேல்நாட்டு மருத்துவர்கள் சோதனை செய்து கண்டறிந்தனர். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவத்தில் மருதோன்றியை பயன்படுத்தி நலம்பெறச் செய்துள்ளனர் நம் சித்தர்கள்.டாக்டர் எமர்சன் மருதோன்றி விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தடவி வந்தால் உடலில் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியாக்கும் என்று கண்டறிதுள்ளனர்.டாக்டர் எய்ன்சிலிக் மருதோன்றியின் பூக்களால் குஷ்ட நோயான தொழு நோயை குணப்படுத்தலாம்என கண்டறிந்துள்ளனர்.வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருந்தோன்றிக்குஉண்டு என்று டாக்டர் ஹொன்னி பெர்க்கர் கூறுகிறார்.

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு